உணவுக்குழாய்,இரைப்பை மற்றும் குடலை காக்க இதை படிங்க - AalosanaiNeram

Hot

Post Top Ad

Friday, June 8, 2018

உணவுக்குழாய்,இரைப்பை மற்றும் குடலை காக்க இதை படிங்க


சென்னையில் இருக்கும் ராஜிவ் காந்தி பொது அரசு மருத்துவமனை கிழக்கு இந்தியக் கம்பெனியின் நோய்வாய்ப்பட்ட ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 1664ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அரசு பொது மருத்துவமனை தொடங்கப்பட்டது.
ஆங்கில பிரெஞ்சு போருக்குப் பிறகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து 1772-ஆம் ஆண்டு புதிய இடத்துக்கு மருத்துவமனை மாற்றப்பட்டது.அலோபதி மருத்துவ சிகிச்சை முறை மூலம் சிகிச்சை அளிப்பதிலும்,நோய்களைக் கண்டறிவதிலும், மருந்துப் பொருள்களைத் தயாரிக்கும் முறைகளிலும் ஐரோப்பியர்களுக்கும், யுரேசியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் பயிற்சி அளித்தனர்.
ராணுவ ஜெனரல்கள் (மருத்துவர்கள்)இந்த மருத்துவமனையை நிர்வகித்ததால் இதற்கு 'ஜெனரல் மருத்துவமனை' என்று பெயர் வந்தது. 1827ஆம் ஆண்டு டாக்டர் மோர்டிமர் மருத்துவமனையின் முதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
டாக்டர் மோர்டிமர் நடத்தி வந்த மருத்துவப் பள்ளி பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டடது.1842-ஆம் ஆண்டு இந்த மருத்துவமனையில் இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக் கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டு, ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 1850ஆம் ஆண்டு இதற்கு 'மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி' என்று பெயரிடப்பட்டது.

26 துறைகளுக்கு தனி அந்தஸ்து:
மருத்துவமனை தொடங்கப்பட்டு 350 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 56 துறைகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில் 26 துறைகளுக்கு தனி நிறுவன(Institute) அந்தஸ்து கிடைத்துள்ளது.
நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறை, மூட்டு நோய் சிகிச்சைருமட்டாலஜி) துறை, இரைப்பைகுடல் அறுவைச் சிகிச்சைத் துறை, முதியோர் சிகிச்சை, முதியோர் அறுவைச் சிகிச்சைத் துறை உள்ளிட்டவை இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை என்று பெயர் மாற்றம் அடைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 18,500 புறநோ யாளிகள் வருகின்றனர்.8,500 படுக்கைகள் உள்ளன.அதே போன்று சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கி 179 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வாய்ந்த இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறை:
மறைந்த முன்னாள் பேராசிரியர் ரங்கபாஷ்யம் 1978-ஆம் ஆண்டு இரைப்பைகுடல் அறுவைச் சிகிச்சைத் துறையை இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த மருத்துவமனையில்தொடங்கினார்.2010-ஆம் ஆண்டு இந்தத் துறை சிறப்பு மையமாக அங்கீகரிக்கப்பட்டது.2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் துறை தனி நிறுவன அந்தஸ்தைப் பெற்றது.
இந்தத் துறையில் ஓராண்டுக்கு 8 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.முக்கியமாக உணவுக் குழாய், இரைப்பை-குடல் சார்ந்த பிரச்னைகள், உணவுக் குழாய் - இரைப்பை-குடல் புற்று நோய்களுக்கு இந்தத் துறை சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறது.

இது குறித்து துறையின் தலைவர் டாக்டர் எஸ். எம். சந்திரமோகன் கூறியது:
எங்கள் துறையில் நோயாளிகள் மீதான தனிப்பட்ட அக்கறை, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை பிற மாநிலங்கள், நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நான்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்தத் துறையைப் பொருத்தவரை 7 நாள்களும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும்.நோயாளிகள் எந்த நேரத்தில் வந்தாலும் துறையில் அனுமதிக்கப்படுவார்கள்.கடந்த ஆண்டில் மட்டும் 952 சிக்கலான அறுவைச் சிகிச்சைகளும் 132 அவசர அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரத்யேக செல்பேசி வசதி:
எங்கள் துறையைச் சேர்ந்த மருத்துவர்களை 94449 01234 என்ற செல் பேசி எண்ணில் நோயாளிகள் தொடர்பு கொள்ளலாம்.இது எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத ஒரு திட்டமாகும்.எங்களிடம் சிகிச்சை பெற்ற பெறும் நோயாளிகள் தங்கள் உடல் நிலை குறித்து தங்கள் வீட்டிலிருந்தே மருத்துவரிடம் ஆசனை கேட்கலாம். மின்னஞ்சல் மூலமும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இது தவிர தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட நோயாளிகள், பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றும் நோயாளிகள் தன்னார்வ உதவிக் குழு ஒன்று செயல்படுகிறது.இதில் சுமார் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த குழுவினர்கள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் ஆலோசனைகளை வழங்குவார்கள்.ஆராச்சியை பொறுத்தவரை இதுவரை 14 சிகிச்சை நுட்பங்கள்(Techniques)இந்த துறையால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.துறையின் சார்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இரைப்பைகுடல் அறுவைச்சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கங்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன.ஆராய்ச்சிக் கட்டுரைகள், போஸ்டர் வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தேசிய அளவில் 73 விருதுகளும், சர்வேதச அளவில் 13 விருதுகளும் கிடைத்துள்ளன.
இந்தத் துறைக்கான மைல் கல்லாக கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் நடைபெறத் தொடங்கிவிட்டால், இந்தத் துறை முழுமை பெற்றுவிடும் என்றார் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன்.



No comments:

Post a Comment

Post Top Ad