முடக்குவாதம் குணமாக சித்தமருத்துவ சிகிச்சை என்ன தெரியுமா - AalosanaiNeram

Hot

Post Top Ad

Friday, June 8, 2018

முடக்குவாதம் குணமாக சித்தமருத்துவ சிகிச்சை என்ன தெரியுமா


முடக்குவாதம்(rheumatoid arthritis)என்றால் என்ன
காலை எழுந்தவுடன் விரல்களை நீட்டி மடக்க முடியாத நிலை இருக்கும். ஒவ்வொரு மூட்டுகளிலும் தாங்க முடியாத வலி, வீககம் ஏற்பட்டு மூட்டு இணைப்புகள் முடக்கப்படுவதால் முடக்குவாதம் எனப் பெயர் பெற்றது.

சித்த மருத்துவத்தில் முடக்குவாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சந்துவாதம், கீல்வாயு, மூட்டுவலி என அழைக்கப்படுகிறது.

எந்த வயதினருக்கு வரலாம்?
முடக்குவாதம்(Paralysis) 30-40 வயதுக்குள் உள்ளோரை பெரும்பாலும் பாதிக்கிறது என்றாலும் எந்த வயதி லும் வரலாம். இந்த பாதிப்பு பெண்களிடம் அதிகமாக உள்ளது.

முடக்குவாதம் எப்படி வருகிறது?
முடக்குவாத பாதிப்புக்கான காரணம் இதுவரை முழுமையாகக் கண்டறியப்படவில்லை.எனினும் எலும்பின் அடர்த்தி, புரதச்சத்து குறைபாடு, சிக்குன்குனியா காய்ச்சலைத் தொடர்ந்தும் எதிர்ப்புத் திறன் மாறுபாடு ('இம்யூன் காம்ப்ள க்ஸ்' -Immune complex) காரணமாகவும் முடக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

முடக்குவாதம் அறிகுறிகள் என்ன?
திடீரென்று சிறு மூட்டுகளில் வலி(Small Arms), சுரம் ஏற்பட்டு நீட்ட மடக்க (stretched pain) முடியாமலும் தாங்கமுடியாத வலி, விரைப்புத்தன்மை ஏற்பட்டு பெரிய மூட்டுகளான முழங்கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டுகளில் வலி, வலியுடன் கூடிய வீக்கம் ஏற்படலாம். பொதுவாக இது உடலின் எல்லா மூட் டுகளையும் பாதிக்க வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் இருதய தசைகளை பும் தாக்கி நெஞ்சு வலி, மூச்சுவிட சிரமம் ஏற்படலாம். கண் வறட்சியும் ஏற்படலாம். நாளடைவில் கை, கால் வளைந்து செயல்பாடு இல்லாமல் போகலாம். குளிர்ந்தகாற்று, மழைக் காலங்களில் நோய் குறி, குணங்கள் அதிகரிக்கும். 

முடக்குவாத பாதிப்பை எப்படிக் கண்டுபிடிப்பது? 
ரத்தப் பரிசோதனையில் RA Factor CRP, Anticccp ஆகியவை அதிகமாக இருக்கலாம்.சில சமயம் இவையாவும் இயல்பாகவும் இருக்கலாம் (Sero Negative Arthropathy).

சித்த மருத்துவ சிகிச்சை என்ன?
லிங்கசெந்தூரம், வெடியுப்பு சுண்ணம், குங்கிலிய பற்பம், அண்டஓடு, பலகறை, சங்கு, முத்துசிப்பி பற்பம்கள், திரிவங்க சுண்ணம், சுகபேதி சூரணம் முதலிய மருந்துகள் பலன் தரும்.சித்த மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மருந்துகளைச் சாப்பிடும் நிலையில், முடக்குவாத நோயை உருவாக்கும் IgM. lgG, lgA 'ஆன்ட்டிபாடிகளை' சிறுநீர் -மலம் மூலம் வெளியேற்றி முடக்குவாத நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.ஆரம்ப நிலையிலிருந்து நோய் தாக்கிய 5 ஆண்டுகள் வரை உள்ளோருக்கு மிக விரைவில் குணமாகிறது. கை கால் விரல்கள் மடங்கி வளைந்து செயல்படாத நிலை வந்தவர்களுக்கு குணமாவது சிரமமாக உள்ளது. பின் விளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை.

மருந்துகள் எத்தனை நாள் சாப்பிட வேண்டும்?
3 மாதம் முதல் ஓராண்டு வரை பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை போதுமானது. மிக நாள்பட்ட முடக்குவாத நோய்க்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை சிகிச்சை தேவைப்படலாம். தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால், RA Factor CRP, Antic ccp ஆகியவை இயல்பு நிலையை அடைந்திருக்கும்.

உணவுக் கட்டுப்பாடுகள் என்ன?
அதிக காரம், அசைவ உணவுகள், பரோட்டா, எண்ணெய் பலகாரங்கள், வாழைக்காய், உருளைக்கிழங்கு, குளிர்பானங்களைத் தவிர்ப்பது அவசியம். இதே போன்று உடலில் வாதத்தை அதிகரிக்கக் கூடிய முற்றிய காய்கறிகளைத் தவிக்க வேண்டும். மாறாக, முளைகட்டிய தானியங்கள்(sprouted grains), முடக் கறுத்தான்(Mutukkattan) – தழுதாழை(molasses)- வாதநாராயணன்( Vadanarayanan) உள்ளிட்ட கீரை வகைகள், பிரண்டை,பிஞ்சுக் காய்கறிகள், வைட்டமின் 'சி' அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடலாம்.உணவில் பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றை தொடர்ந்து சீரான அளவில் சோத்துக் கொள்வதன் மூலம் முடககுவாத வலியைக் கட்டுப்படுத்தி கொள்ளலாம்.


1 comment:

  1. i am suffering from rheumatic arthritis from 2yrs. above the medicines are available where? tell me about via my email id is rthamarair@gmail.com

    ReplyDelete

Post Top Ad