உடல்பருமனை பக்கவிளைவுகள் இல்லாமல் குறைக்க சிறந்த சிகிச்சை எது தெரியுமா?? - AalosanaiNeram

Hot

Post Top Ad

Sunday, June 10, 2018

உடல்பருமனை பக்கவிளைவுகள் இல்லாமல் குறைக்க சிறந்த சிகிச்சை எது தெரியுமா??


உடல் பருமன் என்பது BMI (Body E-Mass Index) அளவை வைத்துக் கணக்கிடப்படுவது.Body Mass Index 40-க்கு மேல் உள்ளவர்களுக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் மட்டுமே உடல் எடை குறையவாய்ப்புள்ளது.BMI 35-க்கு மேல் உள்ளவர்களுக்கும் அவர்கள், சர்க்கரை நோயாளியாகவோ ரத்த அழுத்த நோய் உள்ளவர்களாகவோ இருந்தால் அவர்களுக்கு இந்த அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.ஏனென்றால், இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர்களுடைய சர்க் கரை நோயும், ரத்த அழுத்தமும் குறைந்த அளவு மருந்துகளை உட்கொள்வதால் அல்லது மருந்துகளின் தேவை இல்லாமலே கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பு உண்டு.BMI 35-க்கு குறைவாக உள்ளவர்கள்(Less than BMI value is 35) அறுவைச் சிகிச்சை அல்லாத மற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி உடற்பயிற்சி,உணவு முறைக் கட்டுப்பாடு, மருந்துகள், எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடலாம்.


இந்த அறுவைச் சிகிச்சைக்கு வயது வரம்பு உண்டா?
இந்த அறுவைச் சிகிச்சை 25 வயது முதல் 60 வயது வரை ஆண், பெண்களுக்கு பொதுவாக செய்யப்படுகிறது.சில சமயங்களில் குழந்தைகள், இளம் வயதினருக்கும் செய்யப்படுகிறது.

உடல் பருமனைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சை லாப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படுகிறதா?
உடல் பருமன் குறைப்புக்கான அறுவை சிகிச்சை தற்போது லாப்ராஸ்கோப்பி (நுண்துளை அறுவை சிகிச்சை)முறையில் செய்யப்படுகிறது.இந்த முறையில் செய்வதால் உடல் பருமன் உள்ள நோயாளிகள் 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கினால் போதும்.

எந்த வகையான அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது?
உடல் பருமன் அறுவைச் சிகிச்சை இரண்டு வகைப்படும்.முதலாவது  Restrictive Procedure (e.g.: 1. Sleeve gastrectomy, 2. Gastric Banding) இரைப்பையின் அள வைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சை. இரண்டாவது Malabsorptive procedure (e.g. : Gastric Bypass).இந்த இரண்டு வகையான அறுவைச் சிகிச்சையில் பொதுவாக மேற்கொள் ளப்படுவது, Sleev-gastrectomy எனும் Restrictive procedure (அல்லது) Gastric Banding எனும் Restrictive procedure. அதாவது சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்கும் வகையில் அறுவைச் சிகிச்சை அமையும்.உடல் பருமனுடன் சர்க்கரை நோயும் இருப்பவர்களுக்கு Gastric Bypass எனப்படும் அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.

'ஸ்லீவ் கேஸ்ட்ர க்டமி' (Sleev-Gastre ctomy) அறுவைச் சிகிச்சையின் பலன் என்ன?
இந்த அறுவைச் சிகிச்சை முறை இன்று உலக அளவில் அதிகமாக செய்யப்படும் உடல் எடை குறைப்பு அறுவைச் சிகிச்சையாகும்.இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் இரைப்பையின் பெரும்பகுதி (3-ல் 2 பகுதி) லாப்ராஸ்கோப்பி மூலம் அகற்றப்படுகிறது.
இதன் மூலம் இரைப்பையின் கொள்ளளவு 50 மில்லி மட்டுமே.இதனால் நோயாளி உணவு உட்கொள்ளும் அளவு குறைவதால் எடைக் குறைப்பு சாத்தியமாகிறது. இந்த அறுவைச் சிகிச்சையில் சிறு குடலில் எந்த மாற்றமும் செய்யாத தால் மிகப்பெரிய பின் விளைவுகள் இல்லை.

'கேஸ்ட்ரிக் பேண்டிங்' என்றால் என்ன?
அறுவைச் சிகிச்சையின் மூலம் சிலிக்கானால் செய்யப்பட்ட Gastric band இரைப்பையில் பொருத்தப்படுகிறது.இது இரைப்பையை இரு பாகங்களாகப் பிரிக்கிறது. இதனால் இரைப்பையின் மேல் பகுதி 30 மில்லி கொள்ளளவு உள்ளதாக மாற்றப்படுகிறது.இதனால் நோயாளி குறைந்த உணவே உட்கொள்ள முடியும்.
உணவு உட்கொள்ளும் அளவு குறைவதால் நோயாளியின் எடைக் குறைப்பு சாத்தியமாகிறது.இந்த அறுவைச் சிகிச்சை முறையின் குறைபாடு என்ன என்றால்,Gastric band இடம் பெயர்வதற்கோ செயலிழந்து போவதற்கோ வாய்ப்புள்ளது.

எனவே மீண்டும் அறுவைச் சிகிச்சையின் மூலமாக இந்த பேன்டை நீக்கி விட்டு மீண்டும் ஒரு பேன்டை பொருத்துவதோ அல்லது வேறு அறுவைச் சிகிச்சை செய்யவோ வேண்டியிருக்கும்.இந்த Gastric band முறையானது உலக அளவில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே செய்யப்படுகிறது.

'கேஸ்ட்ரிக் பை-பாஸ்' அறுவைச் சிகிச்சை என்றால் என்ன?
அதிக எடையுடன் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை இது. இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் இரைப்பை இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகிறது.முன் சிறுகுடல் இரைப்பையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டு உணவு செல்லும் பாதையும் பித்தமும் கணைய நீர் செல்லும் பாதையும் தனித் தனியாகப் பிரிக்கப்படுகிறது.இவை இரண்டும் பின்னர் ஒன்றாக இணைக்கப்படுகிறது.இதன் மூலம் அதிக அளவு எடை குறைப்பும் சர்க்கரை நோய் கட்டுப்படுவதற்கும் மிக அதிக வாய்ப்புள்ளது.ஆனால் சிறு குடலில் மாற்றங்கள் செய்வதால் இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்கள் வாழ்நாள் முழுதும் வைட்டமின்கால்ஷியம்-புரதச் சத்துள்ளவற்றைச் சாப்பிடுவது அவசியம்.

இந்த எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்குப்(Weight reduction operation) பின்னர் மீண்டும் எடை அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டா?
வாய்ப்பு உள்ளது.எந்த வகையான எடை குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்தாலும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிறிது எடை கூடுவதற்கு வாய்ப்பு உண்டு.ஆனால், இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவ ரின் ஆலோசனையையும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையையும் பின்பற்றினால் மீண்டும் எடை கூடுவதற்கான வாய்ப்பு குறையும்.

இந்த அறுவைச் சிகிச்சையில் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?
உடல் பருமன் உள்ளவர்களுக்கு மயக்கமருந்து(anesthesia) கொடுத்து எந்த ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளது. குறிப்பாக, இந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகள், மூச்சுத் திணறல் வருவதற்கு வாய்ப்புண்டு.இந்தப் பிரச்னையை முதலிலேயே அறிந்து கொண்டால் அதற்குறிய சிகிச்சை மேற்கொள்ளலாம்.இந்த உடல் பரு மன் அறுவைச் சிகிச்சை இரைப்பை, சிறுகுடலில் செய்யப்படுவதால் அங்கே இரைப்பை நீரோ, சிறுகுடல் நீரோ கசிய வாய்ப்புள்ளது.இதையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருந்துகள் மூலமாகவோ அல்லது மறு அறுவைச் சிகிச்சை மூலமாகவோ சரி செய்துவிடலாம்.

இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து மருத்துவரைச் சந்திக்க வேண்டுமா?
எந்த வகையான உடல் பருமன் குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாலும் வாழ்நாள் முழுவதும் மருத்துவரை அணுகுவது கட்டாயம். ஏனென்றால் இந்த அறுவைச் சிகிச்சை எதிர்பார்த்ததை விட அதிகமான எடை குறைவோ அல்லது அறுவை சிகிச்சையின் பின் விளைவுகளோ ஏற்படும் வாய்ப்புள்ளது.குறிப்பாக சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் உள்ளவர்கள் குறைந்த அளவு மாத்திரை உட்கொள்ளும் அவசியம் வரலாம்.

இந்த அறுவைச்சிகிச்சையின் மூலம் ரத்தத்தில் கொழுப்புச்சத்து சேருவது(absorption of fat in the blood), மாரடைப்பு(heart attack)ஏற்படுவதைத் தடுக்க முடியுமா?
உடல் பருமன் உள்ளவர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களாகவோ ரத்தக் கொதிப்பு உள்ளவர்களாகவோ உள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதால் சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் கொழுப்புச்சத்தும் குறைய வாய்ப்புள்ளதால் இவர்களுக்கு மாரடைப்பு வருவ தற்கான வாய்ப்புகள் குறைவு.




No comments:

Post a Comment

Post Top Ad