ஆலயங்களிலும் வீடுகளிலும் இனி கற்பூரம் ஏற்றாதீர்கள் ஏன்னு தெரியனுமா இதை படிங்க - AalosanaiNeram

Hot

Post Top Ad

Thursday, June 7, 2018

ஆலயங்களிலும் வீடுகளிலும் இனி கற்பூரம் ஏற்றாதீர்கள் ஏன்னு தெரியனுமா இதை படிங்க


நமது நாட்டில் இறைவழி பண்பாடாக தூபம் இடுதலும்(Incense) தீபம் இடுதலும்(lamp) குறிப்பிடப்படுகிறது. தூபமும் தீபமும் ஒருசேர இறைவனுக்கு படைக்கப்படு வதாக இயற்கை கற்பூரமே அமைகிறது.
சின்னமோனம் கேம்பரா (Cinnamonum Camphora) எனும் ஒருவகை செடியின் வேர் அடிப்பாகம், இலைகள் ஆகியவற்றை துண்டுகளாக்கி நீருடன் சேர்த்து வாலை இயந்திரத்தில் இட்டு, தைலமாக இறக்கி உறை நிலைக்குக் கொண்டு சென்று இயற்கை கற்பூரம் தயாரிப்பது முற்காலத்தில் மரபாக இருந்தது. இது கைப்பு-கார்ப்பு ஆகிய சுவைகளுடன் விறுவிறுப்பையும் கொண்டது. வாயில் போட்டு சுவைக்கும்போது இதை உணர முடியும்.

இயற்கை கற்பூர புகையால் பல நன்மைகள்:
இயற்கையாகக் கிடைக்கும் கற்பூரத்துக்கு பூச்சிகள் - கிருமிகள், தலை பாரம், தலை நீரேற்றம், வாந்தி, உடலில் அதிகரிக்கும் பித்தம், காது மூக்கு தொடர் பான நோய்கள் ஆகியவற்றைப் போக்கும் ஆற்றல் உண்டு என்பதை சித்தர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

இன்றைய நிலைமை என்ன?
இத்தனை சிறப்புக்ளைக் கொண்ட இயற்கை கற்பூரத்தை இன்றைய நிலையில் தயாரிப்போர் மிகக் குறைவு.தயாரிப்பு குறைவு என்பதால், சந்தைப்படுத்துதலும் மிகவும் குறைவு.இதனால் இயற்கை கற்பூரம் குறித்த விழிப்புணர்வும் மிகவும் குறைவு.மாறாக, இப்போது ஆலயங்களின் வாயிலில் உள்ள கடைகளிலும் பிற கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கற்பூர வில்லைகள் - கற்பூரக் கட்டிகள் அனைத்துமே முழுவதும் பெட்ரோலிய-வேதிபொருள்களின் கழிவாகும்.அவசரமான இந்த உலகத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு தீமைளைச் செய்யும் இதைப் பலர் அறியாமல் இத்தகைய செயற்கை கற்பூரத்தை தொடர்ந்து பலர் பயன்படுத்தி வருவது மருத்துவ உலகுக்கே பெரும் சவாலாகும்.

உடல் நலனுக்கு எவ்வாறு தீமை?
பெட்ரோலிய பொருள் கழிவுகளால்(petroleum material waste) தயாரிக்கப்படும் செயற்கை கற்பூர வில்லைகள்(Artificial camphor), காற்றில் மாசு ஏற்படுத்தக்கூடிய கொடிய நச்சுப் பொருள்களான கார்பன் மோனாக்ஸைடு, கார்பன்-டை ஆக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன.மனித வாழ்வுக்கு உத்தரவாதம் அளித்து வரும் ஓசோன் படலத்திலேயே இந்த நச்சுப் பொருள்கள் ஓட்டை போடும் ஆற்றலைப் பெற்றுள்ளன என்பதை இன்னமும் பலர் அறியாமல் செயற்கை கற்பூரத்தை தொடர்ந்து ஏற்றுவது துரதிருஷ்டவசமானது.பூமி வெப்பமயமாதலுக்கும் செயற்கை கற்பூரம் தூண்டுதலாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்துமா(asthma), மூக்கடைப்பு(nasal), நீரேற்றம்(hydration), ஒவ்வாமை (allergy) முதலிய குறிகுணங்களோடு ரத்தத்தையும் நஞ்சாக்கும் தன்மை இந்த செயற்கை கற்பூர புகை வெளிப்படுத்தும் மேலே குறிப்பிட்ட கரியமில வாயுக்களுக்கு உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

இறை வழிபாட்டுக்குத் தீர்வு என்ன?
ஆலயங்கள், வீடு உள்பட சிறப்பு நாள்களில் இறைவனை வழிபடும் போது, செயற்கை கற்பூரத்துக்குப் பதிலாக பசு நெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) அல்லது இவை மூன்றும் சேர்ந்த முக்கூட்டு நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. இந்தப் பொருள்களில் உள்ள நுண் மருத்துவத்துகள்கள் (மெடிக்கோ நானோ பார்ட்டிக்கிள்ஸ்-Medico Nano Particles) புகை மூலம் வெளிப்பட்டு உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நன்மை செய்கின்றன.இதனால் தெய்வீகத் தன்மையும் அதிகரிக்கிறது



No comments:

Post a Comment

Post Top Ad